மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றில் மணல் அள்ளுவதால் சேதமடையும் கூட்டுக்குடிநீர் கிணறுகள்
மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றில் மணல் அள்ளுவதால் கூட்டுக்குடிநீர் திட்ட கிணறுகள் சேதமடைந்து வருகின்றன.
மானாமதுரை,
மானாமதுரை பகுதி வைகையாற்றில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக் காக 72 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வைகையாற்றில் ஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் ராட்சத மோட்டார்கள் மூலம் எடுக்கப்படுகிறது.
கூட்டுக் குடிநீர் திட்ட கிணறுகள் ஆற்றில் சரிந்து விடாமல் இருப்பதற்காக கிணறுகளை சுற்றிலும் கற்கள் கொண்டு கட்டப்பட்டுஉள்ளது. ஆனால் சமீபகாலமாக இந்த பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளும் மர்மநபர்கள் கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளைச் சுற்றிலும் மணல் அள்ளுவதால் இந்த கிணறுகள் சரிந்து வருகின்றன. கூட்டுக்குடிநீர் திட்ட கிணறுகள், மேம்பாலங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு மணல் அள்ள தடை இருந்த போதிலும் இது பற்றி மர்மநபர்கள் கண்டு கொள்ளாமல் தொடர்ச்சியாக மணல் அள்ளி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள கிணறுகள் சேதமடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
மானாமதுரை வட்டாரத்தில் ராஜகம்பீரம், தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட வைகை ஆற்றுப் படுகையில் இரவு நேரத்தில் மணல் அள்ளுவது அதிகரித்து வருகிறது. டிராக்டர்களில் மணல் அள்ளப்பட்டு அருகில் உள்ள செங்கல் சேம்பர்களில் குவித்து வைக்கப்படுகிறது. பகல் நேரத்தில் லாரிகளில் பாதி அளவிற்கு மணலும் அதன் மேல் செங்கல் அடுக்கி நூதன முறையில் பரமக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு மணல் அள்ளுவதற்கு துணையாக இருக்கும் செங்கல் காளவாசல்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தாலும் அவர்கள் அதை கண்டு கொள்வதில்லை.
எனவே மணல் அள்ளுவதை தடுக்க போலீஸ் அதிகாரிகள் சிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.