சாம்பல் புதன் திருப்பலியுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

சாம்பல் புதன் திருப்பலியுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது.;

Update: 2018-02-14 21:00 GMT
நெல்லை,

சாம்பல் புதன் திருப்பலியுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது.

சாம்பல் புதன்

கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூறுகின்ற வகையில் சாம்பல் புதன்கிழமையில் இருந்து புனித வெள்ளி முடிந்து உயிர்த்தெழுதல் நாட்கள் வரை தவக்காலம் கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் நேற்று நடந்தது. இதில் இருந்து கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை தொடங்கி உள்ளனர். வருகிற மார்ச் மாதம் 29-ந் தேதி பெரிய வெள்ளிக்கிழமையும், 30-ந்தேதி புனித வெள்ளி ஆராதனையும் நடக்கிறது. ஏப்ரல் 1-ந் தேதி ஏசு உயிர்தெழுதல் ஆராதனையும் நடக்கிறது.

பாளையங்கோட்டை சவேரியார் ஆலயத்தில் நேற்று காலையில் பிஷப் ஜூடுபால்ராஜ் தலைமையில் சாம்பல் புதன் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் நெற்றியில் பிஷப் ஜூடுபால்ராஜ் சாம்பலை பூசினார்.

சிலுவை பயணம்

வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டையில் சிலுவை பயணமும், 25-ந் தேதி மாலை 4 மணிக்கு தவக்கால நடைபயணமும், 4-ந் தேதி காலை 9 மணிக்கு தவக்கால சிறப்பு தியானமும், திருப்பலியும் நடக்கிறது. மார்ச் மாதம் 10-ந் தேதியும், 18-ந்தேதியும் தவக்கால திருப்பயணமும், திருப்பலியும் நடக்கிறது. மார்ச் மாதம் 25-ந் தேதி காலை 7 மணிக்கு பாளையங்கோட்டையில் பிஷப் ஜூடுபால்ராஜ் தலைமையில் குருத்தோலை பவனி நடக்கிறது.

மார்ச் 29-ந்தேதி மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை சவேரியார் ஆலயத்தில் பெரியவியாழன் திருப்பலியும், 30-ந் தேதி புனித வெள்ளி சிறப்பு திருப்பலியும், 31-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு உயிர்ப்பு பெருவிழா திருப்பலியும் நடக்கிறது.

மேலும் செய்திகள்