தமிழகத்தில் கல்வித்துறை ஊழல் மயமாகிவிட்டது
தமிழகத்தில் கல்வித்துறை ஊழல் மயமாகிவிட்டது என்று தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசினார்.;
தர்மபுரி,
தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தர்மபுரி வள்ளலார் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் தங்கராஜ் வரவேற்றார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் பொதுமக்களின் தேவைகள் என்ன என்பது குறித்து தற்போதைய ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் உச்சநிலையை அடைந்து விட்டது. குறிப்பாக தொடக்கக்கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை என மொத்த கல்வித்துறையும் ஊழல் மயமாகிவிட்டது. தமிழக அரசு தற்போது பஸ் கட்டணத்தை அளவுக்கதிகமாக உயர்த்தி விட்டு தி.மு.க. ஆட்சியில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறுகிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த கடைசி 10 ஆண்டுகளில் கிலோ மீட்டருக்கு 4 பைசா மட்டுமே பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டது.
போக்குவரத்து துறை என்பது மக்களுக்கான சேவை துறை என்பதால் அதில் வருவாய் இழப்பு ஏற்படுவது இயல்பானது. தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறையில் இழப்பு ஏற்பட்டபோது அதை சரி செய்ய அரசே மானியம் வழங்கியது. ஆனால் தற்போதைய அரசு அந்த இழப்பை ஈடு செய்ய அளவுக்கதிகமான பஸ் கட்டண உயர்வை மக்கள் மீது திணித்து உள்ளது. தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். அதுவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும். தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், மாநில நிர்வாகி கீரை விசுவநாதன், மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், மாவட்டதுணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், டில்லிபாபு, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன் உள்ள கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேட்டு நன்றி கூறினார்.