ஜெயலலிதா பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட முடிவு
ஜெயலலிதா பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர்,
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருகிற 24-ந்தேதி அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் செங்குந்தபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய தாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பின் சோதனைகளை கடந்து இந்த இயக்கம் வந் துள்ளது. இழந்த இரட்டை இலை சின்னத்தை 2 முறை மீட்ட பெருமை அ.தி.மு.க. விற்கு மட்டுமே உண்டு. ஜெயலலிதா பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
உறுப்பினர் சேர்த்தல்
கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் உள்ளவர்கள் அந்தந்த பகுதியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்தல் பணியையும் மேற்கொள்ள வேண் டும்.
இவ்வாறு அவர் பேசினார். ஜெயலலிதா பிறந்த நாளை ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழகம் உள்பட மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுதல். கட்சியில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்தல் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், நகர செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் நகராட்சி முன்னாள் தலைவர் செல்வராஜ், கரூர் தொகுதி முன்னாள் செயலாளர் திருவிகா, ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாணவர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் தானேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.