ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை
செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டியில் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு பல்வேறு தனியார் வங்கிகள் உள்ளன. வங்கி ஏ.டி.எம்.களும் உள்ளன.
நேற்று வழக்கம் போல அங்குள்ள தனியார் வங்கிக்கு வந்த ஊழியர்கள் வங்கியின் முன்னால் இருந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது அதில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வங்கி மேலாளர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். ரூ.20 லட்சம் வரை கொள்ளை போயிருக்கலாம் என தெரியவருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.