மும்ராவில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்
மும்ராவில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின.
தானே,

தீ விபத்து
தானே மாவட்டம் மும்ரா, சில்பாட்டாவில் கான் காம்பவுண்ட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் குடோன்கள் உள்ளன. இந்தநிலையில் இங்குள்ள ஒரு பிளாஸ்டிக் குடோனில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இது குறித்து அருகே வசித்து வரும் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்கள், 4 தண்ணீர் டேங்கர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பொருட்கள் எரிந்து நாசம்
எனினும் அவர்கள் வருவதற்குள் குடோனில் பிடித்த தீ மளமளவென அங்கிருந்த பொருட்களுக்கு பரவியது. இதன் காரணமாக குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீ பரவுவதை தடுக்க குடோன் அருகே வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பொருட்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். பின்னர் பயங்கரமாக எரிந்து கொண்டு இருந்த தீயை சுமார் 2 மணிநேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் அதிகளவு பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.