ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவனை ஏ.டி.எம். மையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை
ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்ட ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவனை போலீசார் கோவையில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.
கோவை,
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த வடமாநிலத்தை சேர்ந்த மோஷம்கான், அமீன், சுல்பிஹீர், அமித்குமார், சுபேர், முபாரக், முஸ்தாக், மற்றொரு சுபேர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பல இடங்களில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 8 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த கும்பலுக்கு அரியானா மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமுதீன் (43) என்பவர் தலைவனாக செயல்பட்டு வந்ததும், கொள் ளை நடந்ததும், பணத்துடன் இஸ்லாமுதீன் தனது காதலி கிரணுடன் தப்பிச்சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் கடந்த 2-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்று இஸ்லாமுதீனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று அவரிடம் 2-வது நாளாக விசாரணை நடந்தது. அவருக்கு தமிழ் பேச தெரியாது என்பதால், இந்தி மொழி தெரிந்த போலீசார் இந்தியில் பேசி பல கேள்விகளை கேட்டனர். அதற்கு சில கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
என்றாலும் அவர் 7 ஆண்டாக ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்து வந்ததையும், இதுவரை 70-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களில் கோடிக் கணக்கான ரூபாய் கொள்ளையடித்து உள்ளதையும் ஒத்துக்கொண்டுள்ளார். எனவே கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே? இதில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் இஸ்லாமுதீனை நேற்று காலையில் கொள்ளை நடந்த தண்ணீர்பந்தல் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினோம். ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது எப்படி? கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் அதன்மீது நுரையை ஏற்படுத்தும் ஸ்பிரேயை அடித்தது எப்படி? என்பது குறித்து நடித்து காண்பித்தார். கொள்ளையடித்த பணம் எங்கே? அதை தனது காதலி கிரணிடம் கொடுத்தாரா? அல்லது வேறு நபர்களிடம் கொடுத்தாரா? என்று விசாரணை நடத்தப்பட்டது.
இந்த கொள்ளையில் ஈடுபட இஸ்லாமுதீன் தனது காதலியுடன் கோவை வந்து, பின்னர் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அந்த ஓட்டல் அதிபரும், இஸ்லாமுதீனும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் தலைமறைவாகி விட்டதால், அவர் எங்கு உள்ளார்?, காதலி கிரண் எங்கே? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.