நர்சு தற்கொலை: டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டம்
நர்சு தற்கொலை சம்பவம் தொடர்பாக டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில் நர்சுகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
கடலூர்,
பண்ருட்டி தாலுகா நரிமேடு அய்யனார்கோவில் வீதியைச்சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் மணிமாலா (வயது25). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் தான் தங்கியிருந்த அரசு குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 2 டாக்டர்கள் கொடுத்த நெருக்கடியின் காரணமாக மணிமாலா தற்கொலை முடிவை தேடிக்கொண்டதாக புகார் கூறப்படுகிறது.
எனவே மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பாக சம்பந்தப்பட்ட 2 டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சுகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் கடலூர் கிளை செயலாளர் அனுசுயா தலைமை தாங்கினார். பொருளாளர் சுமதி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் குப்புலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரூபி, மாலா மற்றும் நர்சு கண்காணிப்பாளர், நர்சுகள், மற்றும் நர்சு பயிற்சிபள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.