மணல் குவாரியில் இடைத்தரகர்களை நீக்க கோரி டிராக்டர்களை சிறைபிடித்து டிரைவர்கள் போராட்டம்
குமராட்சி அருகே மணல் குவாரியில் இடைத்தரகர்களை நீக்க கோரி டிராக்டர்களை சிறைபிடித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில்,
குமராட்சி அருகே சி.அரசூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஓராண்டாக அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் டிராக்டர்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு மணல் அள்ளிச் செல்லப்படுகிறது.
இந்த நிலையில் மணல் குவாரியில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து லாரி மற்றும் டிராக்டர் டிரைவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் மணல் குவாரியை மூடக் கோரி சி.அரசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இருப்பினும் மணல் குவாரி மூடப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த வெளியூர் டிராக்டர்களை எள்ளேரியில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் லால்பேட்டை, எள்ளேரி, சர்வராஜன்பேட்டை, நெய்வாசல், சோளக்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த டிராக்டர் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீரென சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த குமராட்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட டிராக்டர் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், லாரிகளுக்கு வழங்குவது போல் டிராக்டர்களுக்கும் ஆன்லைனில் பதிவு செய்து மணல் வழங்க அரசு முன்வரவேண்டும். மணல் அள்ளுவதற்கு கூடுதலாக பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும். உள்ளூர் மற்றும் வெளியூர் என அனைத்து டிராக்டர்களுக்கும் பாரபட்சமின்றி மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும். மணல் குவாரியில் இடைத்தரகர்களை நீக்க வேண்டும். மணல் குவாரியை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கூறினர்.அதற்கு போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்ற டிராக்டர் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.