சென்னை கடற்கரை–திருமால்பூர் மார்க்கத்தில் அதிநவீன மின்சார ரெயில் விரைவில் அறிமுகம்

சென்னை கடற்கரை–செங்கல்பட்டு–திருமால்பூர் மார்க்கத்தில் அதிநவீன மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது.;

Update: 2018-02-13 23:45 GMT
சென்னை, 

அதிநவீன மின்சார ரெயிலை நேற்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா தாம்பரம் பணிமனையில் ஆய்வு செய்தார்.

இந்த ரெயில் 12 பெட்டிகள் கொண்டதாகும். ஐ.சி.எப். தொழிற்சாலை தயாரித்த இந்த மின்சார ரெயிலில் அதிநவீன வசதியாக கணினி மையமாக்கப்பட்ட வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், ‘பிரேகிங்’ அமைப்புகள், ரெயிலின் பயன்பாட்டை பதிவு செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக பெண்கள் பெட்டிகளில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து பெட்டிகளிலும் மின்விசிறி வசதிகளுடன், பெட்டிகளின் மேற்கூரையில் காற்றோட்ட அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த காற்றோட்ட அமைப்பு மூலம் ரெயில் பயணத்தின் போது பயணிகளுக்கு அதிக காற்றோட்ட வசதி கிடைக்கும்.

இந்த ரெயில் 105 கி.மீ. வேகம் செல்லும் வகையிலும், 1168 பயணிகள் அமர்ந்து கொண்டும், 4852 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பயன்பாட்டிற்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்