21 மாத ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்,
நாகை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கு காலதாமதமின்றி 8-வது திருத்த ஓய்வூதியத்தை நிலுவையுடன் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் போனசை உடனே வழங்க வேண்டும். 21 மாத ஓய்வூதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் சங்கத்தை சேர்ந்த குணசேகரன், காதர்மொய்தீன், பக்கிரிசாமி, மாவட்ட துணை தலைவர் குப்புசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல், மாவட்ட செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட துணை தலைவர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.