ரெயில் மறியல் செய்ய முயன்ற 21 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.

Update: 2018-02-13 22:00 GMT
ராமநாதபுரம்,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரெயில்வே பணிகளை தனியாருக்கு வழங்க கூடாது, ரெயில்வே நிர்வாகத்தில் பணி ஓய்வு பெறுபவர்களுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.

 இதில் மாவட்ட செயலாளர் ஆதிரெத்தினம் தலைமை தாங்கி னார். போராட்டத்தில் பொருளாளர் மாரிமுத்து, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் கோபி, செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ரெயில் மறியல் செய்ய முயன்ற 21 பேரை போலீசார் கைதுசெய்தனர். 

மேலும் செய்திகள்