விழுப்புரம் வழுதரெட்டி காலனியில் சுகாதார பணிகளை மேற்கொள்ளக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
விழுப்புரம் வழுதரெட்டி காலனியில் சுகாதார பணிகளை மேற்கொள்ளக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி காலனியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி வாய்க்காலிலேயே குட்டைபோல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இப்பகுதியில் குப்பைகளும் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. இந்த குப்பைகளை அகற்றுவதோடு, கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி சுகாதார பணிகளை மேற்கொள்ளக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை 9.15 மணியளவில் அங்குள்ள மெயின்ரோட்டிற்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்து சுகாதார பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் 9.35 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு நகராட்சி ஊழியர்கள், விழுப்புரம் வழுதரெட்டி காலனி பகுதிக்கு வந்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.