கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் திடீர் மரணம் காரணம் என்ன? போலீசார் விசாரணை
கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜான் ஜேக்கப் (வயது 65). இவர் கடந்த 2006, 2011–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவராக 2 முறை இருந்தவர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். பின்னர் ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி த.மா.கா. கட்சியை தொடங்கிய போது அந்த கட்சியில் இணைந்தார். தற்போது தமிழ் மாநில காங்கிரசில் குமரி மேற்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
அவருடைய வீடு கருங்கல் நகரில் உள்ளது. அந்த வீட்டில் அவரும், அவருடைய மனைவி நிர்மலதாவும் (58) வசித்து வந்தனர். இவர்களுக்கு நிதின் டைமன் என்ற மகனும், வெர்ஜின்ரோஸ் என்ற மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
சமீப காலமாக ஜான் ஜேக்கப் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று காலையில் வீட்டில் இருந்த போது அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனால் உடனடியாக அவரை சிகிச்சைக்காக நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மதியம் 1 மணி அளவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சப்–இன்ஸ்பெக்டர் சணல்குமார் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஜான் ஜேக்கப் மரணம் பற்றி அறிந்ததும் அவருடைய உறவினர்களும், த.மா.கா. கட்சியினரும், காங்கிரஸ் பிரமுகர்களும் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
இதுபற்றி ஜான் ஜேக்கப்பின் உறவினர்கள் கூறுகையில், “உடல்நலக்குறைவால் அவருக்கு திடீரென வாந்தி–மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து கருங்கல் போலீசார் கூறுகையில், “முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் அவரது மரணத்துக்கான காரணம் குறித்து தெரியவரும்“ என்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் மரணம் தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று இரவில் ஜான் ஜேக்கப்பின் உடல் நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கும், ஜான் ஜேக்கப் உறவினர்களுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதால் திடீர் சலசலப்பு உருவானது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்.