பெங்களூருவில் சந்தனமர கடத்தல்-கொள்ளையில் ஈடுபட்ட 10 பேர் கைது
பெங்களூருவில், சந்தனமர கடத்தல் மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தனது அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
பெங்களூருவில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்து வந்ததாக 5 பேரை பனசங்கரி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர்களான முகமது இம்ரான் (வயது 30), பைஜூல்லா (48), ரங்கசாமி (45), சபிஉல்லா (30), ஹாசன் மாவட்டம் சென்னராயபட்டணா தாலுகா இரிசாவே கிராமத்தை சேர்ந்த உதய் குமார் (24) என்பது தெரியவந்தது.
இவர்கள் பெங்களூரு கே.எஸ். லே-அவுட், பனசங்கரி, பசவனகுடி, வித்யாரண்யபுரா ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்கள் கைதானதன் மூலம் சந்தனமரத்தை வெட்டி கடத்தியது தொடர்பான 6 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 138 கிலோ எடை கொண்ட சந்தனமரக்கட்டைகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல், பெங்களூருவில் இரவில் தனியாக செல்பவர்களை வழிமறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை-பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து வந்த 5 பேரை சி.கே.அச்சுக்கட்டு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் பெங்களூரு நாயண்டஹள்ளியை சேர்ந்த அஜித் (19), சியாம் (18), ரகு (20), கிரிநகரை சேர்ந்த சந்திரசேகர் (20), தீபாஞ்சலி நகரை சேர்ந்த பீட்டர் (20) என்பது தெரியவந்தது.
இவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், சி.கே.அச்சுக்கட்டு பேட்ராயனபுரா, அனுமந்தநகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த திருட்டு, கொள்ளை என்று 4 வழக்குகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. கைதானவர்களிடம் இருந்து ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 11 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக, கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த சந்தன மரக்கட்டைகள் உள்ளிட்ட பொருட்களை துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா பார்வையிட்டார்.