ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்
ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஒரு கால் துண்டான நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
மணப்பாறை,
மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பின் பகுதியில் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும்- செட்டியபட்டி ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஒரு கால் துண்டான நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் வெள்ளை வேட்டியும், சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி அவர் இறந்தாரா?, ரெயிலில் சென்றபோது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து உடலை ரெயில்வே தண்டவாளத்தில் கொண்டு வந்து போட்டு சென்றனரா? என்பன போன்ற கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.