தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கரூவுரான், குமார், முருகன், சங்கர், அன்பு, ரவிக்குமார், வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரவணன் வரவேற்று பேசினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ரவீந்திரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தர்மபுரி மாவட்டம் வழியாக தமிழக அரசு உயர் அழுத்த மின் கம்பிகள் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும்.
உயர் அழுத்த மின் கம்பி எடுத்து செல்லும் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்ய மாநில அளவில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை அரசு அமைக்க வேண்டும். உயர் அழுத்த மின் கம்பிகளை பூமிக்கு அடியில் கேபிள் மூலம் எடுத்து செல்ல அரசு ஆலோசிக்க வேண்டும். மின் கம்பி வழித்தடங்களில் உள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்க நிர்வாகிகள் தீர்த்தகிரி, சின்னசாமி, அன்பு, ஏழுமலை, குப்புசாமி, சக்திவேல், ராஜா, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.