மேட்டூர் கோர்ட்டில் நடிகை குஷ்பு மீதான வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
நடிகை குஷ்பு கார் மீது முட்டை வீசப்பட்ட வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து மேட்டூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேட்டூர்,
நடிகை குஷ்பு தமிழக பெண்களின் கற்பு குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த வக்கீல் முருகன் மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண்-2 ல் குஷ்பு மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2005-ம் ஆண்டு மேட்டூர் கோர்ட்டில் நடிகை குஷ்பு ஆஜர் ஆனார்.
பின்னர் அங்கிருந்து திரும்பும்போது அவருடைய கார் மீது ஒரு கும்பல், முட்டை, தக்காளி ஆகியவற்றை வீசியது. இதுகுறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி பா.ம.க.வைச் சேர்ந்த அறிவழகன் உள்பட 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண்-1 ல் நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணை போலீஸ் அதிகாரியாக இருந்த அப்போதைய மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டரும், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவருமான தினகரன் பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதன்பின்னர் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்போது ராமநாதபுரத்தில் பணியாற்றுவதாகவும், வழக்கு தொடர்பாக 14-ந்தேதி (நாளை) ஆஜர் ஆக அனுமதிக்குமாறும் கேட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து அரசு தரப்பு வக்கீல் ஜெகநாதன், நீதிமன்றத்தில் இருந்து குஷ்புவுக்கு சம்மன் அனுப்ப மனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 14-ந்தேதிக்கு (நாளை) ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு ராஜா உத்தரவிட்டார்.