மாநகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் வணிகர்கள் கோரிக்கை மனு
வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், வணிகர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
குறைதீர்வு நாள் கூட்டத்தில் கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், விவசாயக் கடன் என 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
சாலை அமைத்து தர வேண்டும்
கூட்டத்தில், குடியாத்தம் தாலுகா தாழையாத்தம் ஊராட்சியை சேர்ந்த மீனாட்சியம்மன் நகர், தங்கம் நகர், தனம் நகர், வி.ஐ.பி. நகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மீனாட்சியம்மன் நகர், தங்கம்நகர், தனம் நகர், வி.ஐ.பி. நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தங்கம் நகர், மீனாட்சியம்மன் நகருக்கான பிரதான சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த இரு சாலைகள் 30 கிராமங்களுக்கு இணைப்பு சாலையாக உள்ளது. கல்மடுகு, மேல்ஆலத்தூர், அகரம்சேரி உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் நிலங்களில் விளையும் விளைபொருட்களை நகரத்துக்கு கொண்டு செல்ல இந்த சாலைகள் தான் பிரதானமாக உள்ளது.
கடந்த மாதம் 28-ந் தேதி தாழையாத்தம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் இந்த சாலைகளை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் நலன்கருதி சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
வாடகை செலுத்த கால அவகாசம்
வேலூர் மாநகர கடை வணிகர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஞானவேலு மற்றும் சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்த மனுவில், வேலூர் மாநகராட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட நியாயமான கடை வாடகை உயர்வை வணிகர்களாகிய நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஈரோடு, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வாடகை உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால் வேலூர் மாநகராட்சி கடைகளுக்கு மட்டும் 500 சதவீதம் முதல் 1,500 சதவீதம் வரை வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய உயர்வினை எதிர்த்து மாநகராட்சி அலுவலர்களிடம் மனு கொடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே, மாநகராட்சியில் உள்ள கடைகளுக்கு வாடகை செலுத்த கால அவகாசம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.