சர்வேயருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
லஞ்சம் வாங்கி கைதான சர்வேயருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 43). அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வாரியங்காவலில் உள்ள தனது மனைவி விஜயாவுக்கு சொந்தமான நிலத்தை அளந்து தருமாறு, ஆர்.எஸ்.மாத்தூர் படைவெட்டி குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவரும், குவாகத்தில் சர்வேயராக(நில அளவையர்) பணியாற்றியவருமான மணிமொழி (63) என்பவரை அணுகினார். அதற்கு அவர் நிலத்தை அளந்து கொடுக்க ரூ.2 ஆயிரத்து 500 லஞ்சம் தருமாறு கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கருணாநிதி இது குறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் 17.8.2012 அன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்து 500-ஐ மணிமொழியிடம், கருணாநிதி கொடுத்தார். இதையடுத்து மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் மணிமொழியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ரவி, லஞ்சம் வாங்கிய சர்வேயர் மணிமொழிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து மணிமொழியை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.