கொடைக்கானலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-02-12 20:33 GMT
கொடைக்கானல்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் ஆண்டி தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ஜான் கிறிஸ்டோபர், நகர நிர்வாகி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் ஓட்டலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதை கண்டித்தும், நகராட்சியில் நடைபெறும் சீர்கேடுகளை களைய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்