இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; இருதரப்பினர் மோதல்
நெல்லை அருகே, கிராமத்துக்கு வரி செலுத்தாமல் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மானூர்,
நெல்லை அருகே உள்ள நடுப்பிள்ளையார்குளத்தை செர்ந்தவர் பிச்சையா என்ற சவரிமுத்து(வயது50). சவரத்தொழிலாளி. இவர், கடந்த சில ஆண்டுகளாக ஊருக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தவில்லை. ஊரில் சவரத் தொழிலும் செய்யாமல் இருந்து உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கோவை சென்று வேலை பார்த்து வந்தார். இதற்கு இடையில் அவர் கிறிஸ்துவ மதத்துக்கு குடும்பத்துடன் மாறி விட்டார். மேலும், சில குடும்பத்தினர் அந்த மதத்துக்கு மாறி விட்டனர்.
இந்த நிலையில், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட அவர், ஊருக்கு திரும்பி வந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை ஊருக்கு அருகில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். இதற்கு, கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த சுப்பம்மாள்(80) என்பவர் நேற்று இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய ஊருக்கு அருகில் கிராமத்தினர் அனுமதியுடன் குழி தோண்டப்பட்டது. இதற்கு அருகிலுள்ள இடத்தில், பிச்சையாவை அடக்கம் செய்ய, அவரை சார்ந்தவர்கள் குழி தோண்ட முயற்சித்தனர். இதை அந்த கிராமத்தினர் தடுத்தனர். இதனால், இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
அந்த கிராமத்துக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில், தாழையூத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு, மானூர் தாசில்தார் மோகனா, வருவாய் அதிகாரி முத்துலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் கணேசன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண் நாராயணன், கணேஷ்குமார் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பிச்சையா உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதை தடுக்க முயன்ற கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், நேற்று இரவு 7.30 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் அவருடைய உடல் ஊருக்கு அருகில் உள்ள இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.