நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்
அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நர்சுவின் உடலை வாங்க மறுத்து காங்கேயம் அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
காங்கேயம்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா நரிமேடு அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் மணிமாலா (வயது 25). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகாத இவர் அங்குள்ள அரசு குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 10-ந்தேதி இரவு இவர் தங்கியுள்ள குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மணிமாலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தற்கொலை செய்த மணிமாலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் செவிலியர்கள், அரசு ஊழியர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டியதாக டாக்டர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மணிமாலாவின் தந்தை ராமலிங்கம் புகார் கூறினார்.
இதையடுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு நர்சுகள் சங்கம், அரசு ஊழியர் சங்கம் மற்றும் உறவினர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணிமாலாவின் தற்கொலைக்கு காரணமான டாக்டர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
மேலும் டாக்டர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மணிமாலாவின் உடலை பெற்றுக்கொள்வோம் என்பதில் உறவினர்கள் உறுதியாக இருந்தனர். போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா மற்றும் திருப்பூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட மணிமாலாவின் குடும்பத்தினர் மற்றும் போராட்டம் நடத்திய செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்தது. நேற்று காலை முதலே கூட்டம் அதிகமாக கூடத்தொடங்கியது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
இதனால் 2-வது நாளாக நேற்றும் காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாகவே இருந்தது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து கோஷம் போட்டபடி இருந்தனர்.
நேற்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறியதைத்தொடர்ந்து காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா தலைமையில் மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் வடிவேல், செவிலியர் சங்க மாநில தலைவர் சக்திவேல், செயலாளர் வளர்மதி, அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் ஞானத்தம்பி, சுப்பிரமணியம் பாதிக்கப்பட்ட மணிமாலாவின் குடும்பத்தினர் மற்றும் கிராம செவிலியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இருதரப்பினரும் அவரவர் கோரிக்கைகளில் உறுதியாக இருந்ததால் இரவு 7 மணி வரை 2 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று இரவும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது