கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
தேசிய ஊரக திட்டத்தில் வேலை வழங்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக் களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் சங்கரலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட கூவாச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு தேசிய ஊரக திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று கூறி அடையாள அட்டைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலெக்டரிடம் மனு கொடுக்க செய்தனர். அந்த மனுவில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் எங்கள் கிராம மக்களுக்கு வேலை வழங்க வேண்டும். அந்த வேலைக்கு உரிய சம்பளம் முழுவதுமாக வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக முன்னாள் மாவட்ட செயலாளர் கண் மணிமாவீரன் ஆகியோர் தலைமையில், தற்கொலை செய்து கொண்ட அரசு ஊழியர் முத்துமாலையின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.அந்த மனுவில், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை துறை ஊழியராக வேலை பார்த்து வந்த முத்துமாலை, உயர் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய மனைவிக்கு அரசு வேலையும், அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது மகள் மாலினியை பிரசவத்துக்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அங்கு 3-2-2018 அன்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த கொஞ்ச நேரத்தில் எனது மகளுக்கு வலி ஏற்பட்டது. இதற்கு செவிலியர் ஊசி போட்டார். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூறினார்கள். ஆம்புலன்ஸ் 2 மணி நேரம் தாமதமாக வந்தது. மேலும் அதில் ஆக்சிஜன் இல்லை. இதனால் எனது மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துவிட்டார். எனது மகள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பாளையங்கோட்டை சிவன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது சுவாமி சிலைகளின் அடியில் இருந்து எடுக்கப்பட்ட தங்கம், செப்புதகடுகள் காணாமல் போய்விட்டன. இதை எடுத்து சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள சம்பங்குளம், அய்யாபுரம் மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தங்கள் ஊரில் உள்ள ரேஷன் கடைக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
பழவூர் சிதம்பரபுரத்தை சேர்ந்த முருகன் மனைவி கலா என்பவர் தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், கடந்த 19-12-2017 அன்று தனது கணவரை 4 பேர் அடித்து கொலை செய்துவிட்டனர். கொலை செய்த குற்றவாளிகள் 3 பேரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. ஒருவரை மட்டும் கைது செய்து உள்ளனர். மற்ற 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
நெல்லை டவுன் அக்காசாலை விநாயகர் கோவிலை சேர்ந்த நாராயணன் மனைவி தனலட்சுமி என்பவர், தன்னிடம் கந்துவட்டி கேட்டு தனது வீட்டை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
மானூர் குப்பனாபுரம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து தங்களுடைய ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.