மாதலீஸ்வரர் கோவிலில் பால் அபிஷேகம்
காஞ்சீபுரம் மாதலீஸ்வரர் கோவிலில் பால் அபிஷேகம் நடந்தது.
காஞ்சீபுரம்,
மகா சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சீபுரம் அங்காளம்மன் தெருவில் உள்ள கடுவெளி சித்தர் மாதலீஸ்வரர் கோவிலில் உள்ள லிங்கத்திற்கு அபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டது. காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து 508 பேர் பால்குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் பால் அபிஷேகம் நடந்தது. 308 திருவிளக்கு பூஜையும் நடந்தது.