திருவாரூரில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-12 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன், பெத்தபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில செயலாளர் குருசந்திரசேகரன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து துறை ஓய்வூதியர்களுக்கும் பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும். நகராட்சி, ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 21 மாத ஓய்வூதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதிய திருத்தம் செய்யப்படாமல் உள்ள அனைத்து ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கும் ஓய்வூதிய திருத்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் மீனாட்சிசுந்தரம், நகரதலைவர் அப்பாராஜ், நிர்வாகிகள் பாண்டுரெங்கன், செந்தில்குமார், விமலாமணி, உஷாகுமாரி, மனோகரன், அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் முனியன் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் தமிழரசன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்