தண்ணீருக்காக கிணற்றடியில் விடிய விடிய தவம் கிடக்கும் கிராம மக்கள், காலிகுடங்களுடன் திரண்டு மனு
குடிநீருக்காக கிணற்றடியில் இரவு முழுவதும் விடிய விடிய தவம் கிடப்பதாக திருவாடானை யூனியன் மணிகண்டி கிராம மக்கள் காலி குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லூர் ஊராட்சியில் உள்ளது மணிகண்டி கிராமம். சுமார் 300 வீடுகளையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்ட இந்த கிராமத்திற்கு ஆரம்பத்தில் இருந்து கரும்புளி பகுதியில் இருந்து ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதுதவிர, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டு சில நாட்கள் மட்டும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 9 மாதங்களாக இந்த கிராமத்திற்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இந்த பகுதி மக்கள் தொத்தரகோட்டை, திருவிடைமதியூர், ஆண்டிவயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்து சென்று ஒருகுடம் தண்ணீர் எடுத்து வந்து குடித்து வருகின்றனர். இது தவிர, ஊரில் உள்ள ஊருணியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் சிறிதளவு ஊறிவரும் தண்ணீரை பலமணி நேரம் காத்திருந்து பிடித்து சென்றுவருகின்றனர். விடிய விடிய இரவு முழுவதும் கிணற்றின் அருகில் தவம் கிடந்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஊறும் தண்ணீரை பிடித்து குடித்து வருகின்றனர்.
கடும் குடிநீர் தட்டுப்பாடு ஒருபுறம் அன்றாடம் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும், பாத்திரங்கள் சுத்தம் செய்யவும் தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் இல்லாத காரணத்தினால் 3 நாட்களுக்கு ஒருமுறை தான் குளிப்பதாகவும், குளித்தால் துவைப்பதற்கு தண்ணீர் தேவைப்படும் என்பதால் குளிப்பதையும் சிலர் தவிர்த்து வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆண்களும், பெண்களும் கிணற்றின் அருகில் காத்திருந்து ஒரு குடம் தண்ணீரை பிடித்து செல்லும் நேரங்களில் இனியும் இந்த ஊரில் குடியிருக்க வேண்டுமா என்ற எண்ணம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த குடிநீர் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று காலை காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
இவர்கள் அனைவரும் தங்களுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் நடராஜனிடம் மனுகொடுத்தனர். இதேபோல திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுவதாகவும் இதன்காரணமாக நாள்தோறும் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
வருகிற தண்ணீரும் குறைந்தளவே வருவதால் ஒரு வீட்டிற்கு 2 குடம் தண்ணீர் கூட கிடைப்பதில்லை. தனியாருக்கு குழாய்கள் இணைப்பு கொடுத்து முறையான தண்ணீர் வழங்கும் அதிகாரிகள் திருப்பாலைக்குடி பகுதி மக்களுக்கு வழங்க தயங்குகின்றனர். கடந்த முறை பாராளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது போன்று இனிவரும் காலங்களில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுஉள்ளோம். உடனடியாக எங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.