மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாப சாவு

மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-02-12 22:00 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் சலின்(வயது21). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் சலின் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று வழக்கம் போல் சலின் காலையில் கல்லூரிக்கு சென்றார். மாலையில் வகுப்பு முடிந்து அவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

விபத்து

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி மாணவர் சலின் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் சலின் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்