80 ஆயிரத்து 607 பேர் குரூப்-4 தேர்வு எழுதினார்கள் கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 80 ஆயிரத்து 607 பேர் குரூப்-4 தேர்வு எழுதினார்கள் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 பணிகளுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இந்த தேர்வு நடந்த வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசி என்ஜினீயரிங் கல்லூரி, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி போன்றவற்றில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வுக்காக 95 ஆயிரத்து 707 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 80 ஆயிரத்து 607 பேர் தேர்வை எழுதினார்கள். காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 தேர்வு மையங்களில் 298 தேர்வு அறைகளில் இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 21 பறக்கும் படைகளும், 45 நடமாடும் கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.