தேங்காய் சாப்பிட்டபோது மூச்சுத்திணறி ஆசிரியை சாவு
அம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்ற ஆசிரியை அங்கு பிரசாதமாக கிடைத்த தேங்காயை கடித்து சாப்பிட்டபோது ஒரு தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதில் மூச்சுத்திணறி அந்த ஆசிரியை பரிதாபமாக இறந்து விட்டார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு அருகே உள்ள இரேமகலூருவைச் சேர்ந்தவர் நவ்யாஸ்ரீ(வயது 28). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நவ்யாஸ்ரீ தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இரேமகலூரு அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். மேலும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு அம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றார். பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாதமாக கிடைத்த தேங்காயை கடித்து சாப்பிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு தேங்காய் துண்டு அவருடைய தொண்டையில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தரிகெரேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த நவ்யாஸ்ரீயின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.