தனியார் தங்கும் விடுதியில் விபசாரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் உள்பட 4 பேர் கைது

பெங்களூரு பீனியா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு அந்த தனியார் தங்கும் விடுதியில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2018-02-11 23:48 GMT
பெங்களூரு,

இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளரான ராமகிருஷ்ணா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் ராமகிருஷ்ணா துமகூரு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆவார். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். கைதான 4 பேர் மீதும் பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்