ஐ.என்.எஸ். தபார் போர்க்கப்பலில் மாலுமி தூக்குப் போட்டு சாவு

ஐ.என்.எஸ் தபார் போர்க்கப்பலில் ஆந்திராவை சேர்ந்த மாலுமி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2018-02-11 23:02 GMT
மும்பை,

மும்பை டாக்யார்டு பகுதியில் ஐ.என்.எஸ் தபார் போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த கப்பலில் ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த நாயக்குலு(வயது25) என்பவர் மாலுமியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர், நாயக்குலு அறைக்குள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கப்பல் கேப்டனுக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பேரில் கேப்டன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த கடற்படை டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவல் அறிந்து வந்த போலீசார் நாயக்குலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இருப்பினும் எதற்காக இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்