முன்னாள் ராணுவவீரர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதுபானங்கள் பறிமுதல் தந்தை கைது

கண்ணமங்கலம் அருகே முன்னாள் ராணுவவீரர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-02-11 23:00 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிமாநில மதுபானங்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப் - இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அம்மாபாளையம் கூட்ரோடு பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் ஏழுமலை (வயது 40), என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பெங்களூரு மற்றும் ஒடிசா மாநிலங்களை சேர்ந்த மதுபாட்டில்கள் சூட்கேஸ் மற்றும் டிரங்க் பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அங்கிருந்து 230 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் முன்னாள் ராணுவ வீரர் ஏழுமலை மற்றும் அவரது தந்தை ஜெயசீலன் (62) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, ஜெயசீலனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஏழுமலையை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்