மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் விளைநிலமாக மாறிய நீர்தேக்க பகுதிகள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் அணையின் நீர்தேக்க பகுதிகள் விளைநிலமாக மாறியது. அங்கு விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.;
கொளத்தூர்,
தமிழகத்தின் ஜீவாதாரமாக மேட்டூர் அணை திகழ்கிறது. கடல் போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை தற்போது தண்ணீர் இன்றி வறண்டு வருகிறது.
அணையில் உச்சபட்ச கொள்ளளவான 120 அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் தற்போது 43.06 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 37 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தை விட தண்ணீர் அதிகமாக திறக்கப்படுவதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும் போதெல்லாம் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடி, சேத்துக்குளி, மூலக்காடு போன்ற பகுதிகளில் முழுவடை விவசாயம் செய்யப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் நீர்தேக்க பகுதிகளில் உள்ள ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் தற்போது விளைநிலமாக மாறியுள்ளன. அந்த நிலங்களில் உழவு செய்யப்பட்டு வெங்காயம் ஊன்றுதல், நிலக்கடலை, கம்பு, சோளம் விதைப்பது என விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து பண்ணவாடியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால், நீர்தேக்க பகுதியான பண்ண வாடியில் உழவு செய்யப்பட்டு முழுவடை விவசாயத்துக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் அணை நீர்மட்டம் மிகவும் குறைந்தால் முதல்போக சாகுபடிக்கு இந்த நீர்தேக்க பகுதியில் நிலக்கடலை பயிர் செய்ய உள்ளோம். மேலும் முதல்போக சாகுபடியை முழுவடை பாசனம் மூலம் செய்ய முடியும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம், என்றனர்.