சாராயம்- மது தீமைகள் குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
சேலம் மாநகர காவல் துறை சார்பில் சாராயம்- மது தீமைகள் குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
சேலம்,
சேலம் மாநகர காவல் துறை சார்பில் சாராயம் மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நேற்று சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கியது. இதற்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமை தாங்கி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டி 3 பிரிவுகளாக நடைபெற்றது. அதாவது, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஒரு பிரிவாகவும், 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி பிரிவாகவும் போட்டி நடைபெற்றது. 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிசேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி அரசு கலைக்கல்லூரி வரை சென்று மீண்டும் மைதானம் வந்தடைந்தது.
பெண்களுக்கான போட்டி காந்தி மைதானத்தில் தொடங்கி வனத்துறை அலுவலகம் வரை சென்று மீண்டும் மைதானம் வந்தடைந்தது. ஆண்களுக்கான போட்டி காந்தி மைதானத்தில் இருந்து தொடங்கி அரசு கலைக்கல்லூரி வழியாக மத்திய சிறைச்சாலை வரை சென்று மீண்டும் மைதானம் வந்தடைந்தது.
16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிவகுமார், யுவராணி, சூர்யா மற்றும் பெண்கள் பிரிவில் ரூபாஸ்ரீ, லோகநாயகி, சத்யா, ஆண்கள் பிரிவில் குருயாதவ், ராமச்சந்திரன், சங்கர் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த போட்டியில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.