நெல்லிக்குப்பத்தில் ரெயில்வே கேட் எந்திரத்தில் திடீர் பழுது, வாகன போக்குவரத்து பாதிப்பு

நெல்லிக்குப்பத்தில் ரெயில்வே கேட்டை இயக்கும் எந்திரத்தில் திடீரென பழுதானது. இதனால் உடனடியாக ரெயில்வே கேட் மூடப்பட்டதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-02-11 20:38 GMT
நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை இயக்கக்கூடிய எந்திரத்தில் நேற்று மாலை திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் ரெயில்வே கேட்டை இயக்க முடியவில்லை. இது குறித்து கேட் கீப்பர், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விழுப்புரத்தில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து மாலை 4 மணி அளவில் ரெயில்வே கேட் மூடப்பட்டது. பின்னர், பழுதான ரெயில்வே கேட்டை இயக்கும் எந்திரத்தை ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணி ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தால் ரெயில்வே கேட்டின் இருபுறமும் உள்ள சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். 5.15 மணி அளவில் ரெயில்வே கேட்டை இயக்கும் எந்திரம் சரிசெய்யப்பட்டது. பின்னர் மூடப்பட்ட ரெயில்வே கேட் திறக்கப்பட்டு, அந்த வழியாக வாகன போக்குவரத்து நடைபெற்றது. 

மேலும் செய்திகள்