விருத்தாசலம் அருகே வேன் மீது பஸ் மோதல்; 20 பேர் படுகாயம்
விருத்தாசலம் அருகே வேன் மீது பஸ் மோதிய விபத்தில் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
விருத்தாசலம்,
குறிஞ்சிப்பாடி மீனாட்சிப்பேட்டையை சேர்ந்த பழனிச்சாமி(வயது70), தனலட்சுமி (60), ஞானாம்பாள்(90), சரசு(60), நடராஜன்(52) உள்பட 25-க்கும் மேற்பட்டோர் உறவினர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் மாவட்டம் திருப்பட்டூர் கிராமத்துக்கு வேனில் சென்றனர். அங்கு விழா முடிந்ததும் அதே வேனில் அவர்கள் ஊர் திரும்பினர். விருத்தாசலம் அருகே பொன்னேரி புறவழிச்சாலையில் உள்ள நான்குமுனை சந்திப்பை கடக்க முயன்றபோது சிதம்பரத்தில் வந்த அரசு பஸ் ஒன்று அந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பழனிச்சாமி, தனலட்சுமி உள்பட 20 பேர் இடுபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பின்னால் மற்றொரு வேனில் வந்த குறிஞ்சிப்பாடி மீனாட்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன் தலைமையிலான கட்சியினர் மற்றும் பொது மக்கள் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், நான்குமுனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்காத காரணத்தால் தான் இது போன்ற விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தடுக்க நான்குமுனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ராஜாதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.