நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயக்கழிவு நீர் செல்வதை கண்டு கொள்ளாத மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர முடிவு
நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயக்கழிவு நீர் செல்வதை கண்டு கொள்ளாத மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்து நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முத்தூர்,
திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபையின் பொதுக்குழு கூட்டம் முத்தூர் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபை தலைவர் அ.பொ.கந்தசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் அத்தப்பகவுண்டர், துணைத்தலைவர் கே.சி.குழந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒரத்துப்பாளையம் அணை மாசு நீரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலச்சங்க துணைத்தலைவர் டி.சி.துரைசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தற்போது வரை நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீரில் உப்பின் தன்மை 3 ஆயிரம் டி. டி.எஸ். -க்கும் அதிகமாக உள்ளது. மேலும் திருப்பூர் நகர் பகுதிகளில் செயல்பட்டுவரும் சாயத்தொழிற்சாலைகள் இரவு நேரங்களில் சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் உள்ள விவசாயிகளின் விவசாய விளை நிலங்கள், கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் கடுமை யாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் நொய்யல் பாசன பகுதிகளில் விவசாய சாகுபடி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயக்கழிவு நீர் செல்வதை கண்டு கொள்ளாத மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணை செயலாளர் கே.எம்.சண்முகம், பொருளாளர் தங்கமுத்து, மனு நீதி அறக்கட்டளை வானதி, இயற்கை வேளாண் ஆராய்ச்சியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபை செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.