உள்ளாட்சி தேர்தலில் தினகரன் அணியினரை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் அமைச்சர் மணிகண்டன் பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் தினகரன் அணி உள்பட அனைவரையும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் செ.முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மழையின்றி நிலத்தடி நீர்ஆதாரம் கடுமையாக குறைந்துவிட்டது. இந்த நிலையின் காரணமாக மாவட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வந்த முதல்–அமைச்சரிடம் வைகை தண்ணீரை திறந்துவிட கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை உடனடியாக ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்–அமைச்சர் உத்தரவிட்டார்.
இதன்மூலம் வைகை தண்ணீர் சேதாரமில்லாமல் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டதன் காரணமாக ராமநாதபுரம் பெரியகண்மாய் மற்றும் நகரில் உள்ள பெரும்பாலான ஊருணிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இந்த நடவடிக்கையின் காரணமாக மழையில்லாமல் போனாலும் இந்த ஆண்டு நிலத்தடி நீர்ஆதாரம் பாதிக்காமல் ஓரளவு நிலைமை சரிசெய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுஉள்ளது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றப்பட்டுள்ள மக்கள் நல திட்டங்களை தொண்டர்கள் அனைவரும் மக்களிடம் எடுத்துச்சொல்லி விளக்க வேண்டும்.
நாம் செய்துள்ள திட்டங்களை தெளிவாக விளக்கி கூறினாலே தேர்தலில் பாதி வெற்றி கிடைத்து விட்டதாக அர்த்தம். விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் நாம் இப்போதே தயாராக வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் நம்மை எதிர்த்து போட்டியிடுபவர்கள் யாராக இருந்தாலும் அது தினகரன் அணியாக இருந்தாலும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். அதற்கு ஏற்ப நமது பணி முழுவீச்சில் இருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் அதிகமான உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து கட்சியின் வலுவிற்கு வலுசேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.