அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
அ.தி.மு.க. கட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து தேர்வுகளையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. இலவச நீட் தேர்வு பயிற்சி மையத்தில் 70 ஆயிரத்து 419 மாணவர்கள் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள்.
வருகிற 15-ந் தேதிக்குள் 72 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. இந்த மடிக்கணினி மூலம் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தினமும் காலை 3 மணி நேரமும், மாலையில் 3 மணி நேரமும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை -சரித்திரத்தை கவுரவிக்கும் வகையில் நாளை (இன்று) காலை 9.30 மணிக்கு சட்டசபையில் அவரது உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இப்போது புதிய, புதிய கட்சிகள் தொடங்கியும், தொடங் கப்பட்டும் வருகிறது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய கட்சி ஆகும். இதை யாராலும் அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.