கோவை வன கோட்டத்தில் நீர்நிலைகளில் 166 வகையான பறவைகள் இருப்பது கண்டுபிடிப்பு
கோவை வன கோட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் 166 வகையான பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வேட்டையாடுவதை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் புலிகள், சிறுத்தைப்புலிகள், யானைகள், காட்டெருமைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சிறுவாணிமலை, கோவை குற்றால அருவி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. அதில் 94 வகையான பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதுபோன்று தமிழகத்திலேயே முதன்முறையாக கோவை கோட்ட வனப்பகுதியில் பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டான் பூச்சிகளின் கணக்கெடுப்பு கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடந்தது. வனத்துறை அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து வனப்பகுதிக்குள் சென்று நடத்திய கணக்கெடுப்பில் 170 வகையான பட்டாம்பூச்சிகளும், 36 வகையான தட்டான் பூச்சிகளும் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வாழும் பறவைகள் குறித்து கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் 18 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் வாழும் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, சிறுமுகை ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட 25 குளங்கள் மற்றும் அதைச்சுற்றி உள்ள வயல்வெளிகளில் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது.
அதில் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் 79 வகையான பறவைகளும், வயல்வெளிகளில் 87 வகையான பறவைகள் என்று மொத்தம் 166 வகையான பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக வெள்ளலூர் குளத்தில் 89 வகையான பறவைகள் உள்ளன.
இதில் 32 வகையான பறவைகள் இடம்பெயர்ந்து செல்பவையும், 92 வகையான பறவைகள் இங்கேயே நிரந்தரமாக வாழ்ந்து வருபவையும் ஆகும். அது போன்று 42 வகையான பறவைகள் சில மாதங்கள் இங்கேயே வாழும். சில மாதங்கள் வேறு பகுதியில் வாழும் வகையை சேர்ந்தது ஆகும்.
இந்த கணக்கெடுப்பின்போது கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஒரே நேரத்தில் 1,604 பறவைகள் இருப்பதை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இருகூர் குளத்தில் ஒரேவகையை சேர்ந்த 150 பறவைகள் இருந்தன. குறிப்பாக பர்ப்புள் சுவாம்ப் கென், பிளாக்டெய்ல்ட் காட்விட், பென்ட்டெயில் ஸ்டோக், ஒயிட் வாக்டெயில், பெலிக்கான், நீர்க்காகம் உள்பட சில பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
கோவையில் உள்ள நீர் நிலைகளில் இத்தனை வகையான பறவைகள் இருப்பது பெருமைக்குரியது. இங்கேயே நிரந்தரமாக வாழும் பறவைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் பறவைகளுக்கு எவ்வித இடையூறும் கொடுக்காமல் இருந்தால் மேலும் ஏராளமான பறவைகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே பறவைகளுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர், தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். பறவைகளை வேட்டையாடுவது குறித்து பொது மக்களுக்கு தெரியவந்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.