தமிழகத்தில் அனைத்து குளங்களையும் பராமரித்தால் 10 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினை வராது, சத்குரு பேச்சு
தமிழகத்தில் உள்ள அனைத்து குளங்களையும் பராமரித்தால் 10 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினை வராது என்று சத்குரு பேசினார்.
பேரூர்,
கோவை ஈஷாயோகா மையம் அருகே செம்மேடு கிராமத்தில் உக்குளம் உள்ளது. இந்த குளக்கரை பகுதியில் 1,500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். ஆதிவாசி மக்களின் பாரம்பரிய மேளதாளத்துடன் விழா நடைபெற்றது.
வேங்கை, ஈட்டி, தாளிக்காய், நீர்மருது, நாட்டுவாகை, புங்கன், வேம்பு, இலுப்பை, மகிழம், பூவரசு, நாகலிங்கம், மந்தாரை, கடுக்காய், விளாம்பழம், வில்வம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த விழாவில் சத்குரு பேசும்போது கூறியதாவது:-
‘வெள்ளியங்கிரி மலை அருகில், நல்லகாற்று, சுற்றுச்சூழல் இருக்கும் இடத்தில் வாழ்ந்தும் பல சிக்கல் களை உருவாக்கி விட்டோம். நாம் மீண்டும் இந்த நிலத்தை வளமாக மாற்ற வேண்டும். நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு நாம் இதை வளமாக தரவேண்டும்.
குளத்தில் நீர்அதிகரிப்பு மட்டுமின்றி பிறவிஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். ஊர்மக்களுக்கு குளத்துடன் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும். குடும்பமாக அனைவரும் வந்து அமர்ந்து ரசிக்கும் இடமாக நாம் குளத்தை மாற்றவேண்டும். இதை நான் உருவாக்கி தருகிறேன், நீங்கள் அதை பாதுகாத்து பராமரிக்கவேண்டும்.
நாம் 3, 4 கிராமங்களை மாதிரி கிராமமாக உருவாக்க இருக்கிறோம். முதல்படியாக நம் கிராமங்களில் பொருளாதாரம் நன்றாக அமையவேண்டும். நம்மிடம் வளமான மண் இருக்கிறது. இதை முறையாக உபயோகப்படுத்தி விவசாயம் செய்யவேண்டும். அடுத்த வருடம் விவசாயிகளுக்காக நாம் ரூ.2 கோடி செலவில் ஒரு விவசாய பயிற்சி வழங்க உள்ளோம்.
இதில் சிறப்பாக விவசாயம் செய்து பொருளாதார மேன்மைஅடையும் தொழில்நுட்பம், மற்றும் விஞ்ஞானம் கற்றுத்தரப்படும். நமது அமைச்சர் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். அனைத்து ஒத்துழைப்பும் வழங்குகிறார். கிராமதலைவர்கள் ஒன்றிணைந்தால் நாம் இதைசெயல் படுத்தலாம்.
வியட்நாம், கம்போடியா நாடுகளில் இருந்து அமெரிக்காவில் மஞ்சள் இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் மஞ்சள் என்பது நமது பாரம்பரிய பயிர். இதைபற்றி நாம் வியட்நாம் நிபுணர்களிடம் சற்றுவிசாரித்து பார்த்ததில் அவர்கள் நமது வேளாண் பல்கலைகழகங்களில் பயின்றதை நடைமுறைபடுத்தி விவசாயம் செய்து வெற்றி காண்கின்றனர் என்பது தெரியவந்தது.
நமது வேளாண் அறிவை அவர்கள் மண்ணில் போட்டு வெற்றி காண்கிறார்கள். நாமும் இதை நடை முறைபடுத்த வேண்டும். நமது விவசாயிகள் தங்கள் சந்ததியினர் விவசாயம் செய்வதை விரும்பவில்லை. இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் உணவு உற்பத்தி திறனை இழந்துவிடுவோம். எனவே விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பம், விஞ்ஞானம் உள்ளிட்டவை கற்றுகொடுக்கப்படும். இதனால் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.
மேலும் நான் மத்திய அரசாங்கத்துடன் 3 வருடங்களாக விவசாயிகள் பிரச்சினை பற்றியும், தீர்வு பற்றியும் பேசி வருகிறேன். இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும் பட்ஜெட்டாக இருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது.
மேலும் தற்போதைய சட்டப்படி நம் நிலத்தில் 3 அடி ஆழத்தில் இருப்பது மட்டுமே நமக்கு சொந்தம் என்ற சட்டம் மாற்றப்படவேண்டும். நம்நிலத்தில் இருப்பது அனைத்தும் நமக்கே சொந்தம் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அரசிடம் வேண்டுகோள் விடுக்கவிருக்கிறோம். நதிகளை மீட்போம் இயக்கத்தில் 16 கோடி மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்த தேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்ததில்லை.
தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் குறைவு. தமிழகத்தில் குளங்கள் அதிகமாக உள்ளன. அனைத்து குளங்களையும் நல்ல முறையில் பராமரித்து வந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு குடிநீர் தேவை, விவசாய தேவைககு தண்ணீர் பிரச்சினை வராது. எனவே குளங்களை பராமரிப்பது அவசியம். மேலும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் புறம்போக்கு நிலங்களில் மரங்கள் வளர்த்து காடுகள் உருவாக்கி தருகிறோம் என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறிய தாவது:-
“சத்குரு, ஈஷா அறக்கட்டளை மூலம் குறிச்சிகுளத்தை தூர்வாரும் பணியை சிறப்பாக செய்துள்ளார். தொண்டாமுத்தூர் பகுதியில் கிராம குழந்தைகளுக்கான பள்ளியை உருவாக்கியுள்ளார். மின்மயானத்தை உருவாக்கி தந்துள்ளார். சிறுவாணி அணையை தூர்வார சத்குருவின்உதவியை நாடியுள்ளோம்.
எத்தனையோ ஆன்மிக அமைப்புகள் இருக்கின்றன. சிலர் மட்டுமே மக்கள் சேவையில் தங்களை ஈடு படுத்துகிறார்கள். அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குளங்களை பாதுகாப்பதில் மாணவர்கள் ஈடுபடவேண்டும்.