கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு வேல் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி
கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வேல் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருமுருக பெருவிழா திருச்செந்தூரில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு வேல் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ‘முப்பாட்டன் முருகன் வேல் பயணம்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்தியது.
இதையொட்டி நேற்று காலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 6½ அடி உயர வெண்கல வேலுக்கு புனித நீராட்டு, அபிஷேகம், மலர் அபிஷேகம் ஆகியவை நடந்தன.
வேல் பயணம்
அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட வேனில் வேல் பயணம் தொடங்கியது. வீரத்தமிழர் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரலிங்கம் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், மாணவர் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகிம்சன், அறிவுமதி, வீரத்தமிழர் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேல் எடுத்துச் செல்லும் பயணமானது கன்னியாகுமரியில் இருந்து அஞ்சுகிராமம், கூடங்குளம், திசையன்விளை வழியாக திருச்செந்தூரை சென்று அடைந்தது.