வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்

வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Update: 2018-02-11 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கோவளத்துக்கும், கீழமணக்குடிக்கும் இடையே மத்திய அரசு, வர்த்தக துறைமுகம் அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.

உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுபா.முத்து தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ருத்ரா ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்து திருக்கோவில் கூட்டமைப்பு மாநில தலைவர் சிவபிரசாத், செயலாளர் வசந்தகுமார், சதீஷ்கிருஷ்ணா, ஜெனனி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்