கர்நாடக ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 5 நீதிபதிகள் நியமனம்

கர்நாடக ஐகோர்ட்டுக்கு நீதிபதிகள் பற்றாக்குறையாக இருந்தது. இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 5 நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2018-02-10 21:55 GMT

பெங்களூரு,

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகளாக தீக்ஷித் கிருஷ்ணஸ்ரீபத், சங்கர் கணபதி பண்டித், ராமகிருஷ்ண தேவ்தாஸ், மல்லிகார்ஜுன ஷியாம் பிரசாத், சித்தப்பா சுனில்தத் யாதவ் ஆகிய 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 5 பேரையும் சேர்த்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இந்த 5 நீதிபதிகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகளாக 5 பேரும் பதவி ஏற்கும் தினத்தில் இருந்து 2 ஆண்டுகள் பதவியில் நீடிக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்