ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
கோட்டூர் அருகே தட்டுப்பாடின்றி ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சேரி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் விடுமுறை நாட்களை தவிர்த்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடுயின்றி, அளவினை குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும். மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க மேலகண்டமங்கலம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் சேரி, கண்டமங்கலம், மேலகண்டமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சேரி பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், கிளை செயலாளர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்நாதன், கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி வட்ட வழங்கல் அதிகாரி கார்த்திகேயன், திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி, கோட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மேலகண்டமங்கலம் கிராமத்தில் இன்னும் 2 மாதத்திற்குள் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தரப்படும். விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இதனால் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.