பள்ளிதாளாளர் கடத்தல் வழக்கில் சரண் அடைந்த 2 பேரிடம் இருந்து ரூ.24 லட்சம், கார் பறிமுதல்
வாணியம்பாடி பள்ளி தாளாளர் கடத்தல் வழக்கில் சரண் அடைந்த 2 பேரிடம் இருந்து ரூ.24 லட்சம் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர்,
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளராக உள்ளார். இவர் கடந்த மாதம் 19-ந் தேதி காலை உடற்பயிற்சிக்கு செல்லும்போது நியுடவுன் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து அவரை கடத்தி சென்றனர்.
பின்னர் அவரது சகோதரரை தொடர்பு கொண்டு முதலில் ரூ.3 கோடி கேட்டு பின்னர் ரூ.50 லட்சம் வரை பேசி அன்று மாலை கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் அருகில் மர்ம நபரிடம் ரூ.50 லட்சம் கொடுத்து செந்தில்குமாரை மீட்டனர்.
அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
செந்தில்குமார் தெரிவித்த காரின் அடையாளம், மறைமுகமாக எடுக்கப்பட்டிருந்த வீடியோ காட்சிகள் மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு குறித்த தகவல்களை சேகரித்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த முத்து (27), கலீல் இப்ராஹிம் (32) ஆகிய 2 பேரை வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் சினிமா துணை நடிகர் ஹரி (33), லாரி டிரைவர் உதயகுமார் (35) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஹரியும், 5-ந் தேதி திருவள்ளூர் கோர்ட்டில் உதயகுமாரும் சரண் அடைந்தனர். கோர்ட்டில் சரண் அடைந்த 2 பேரையும் வேலூர் மாவட்ட போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்களிடம் இருந்து ரூ.24 லட்சம், ஒரு லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணை முடிந்து 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.