இன்று நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 40 ஆயிரத்து 910 பேர் எழுதுகின்றனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 40 ஆயிரத்து 910 பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதனை சிறப்பாக நடத்தும் வகையில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் 136 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 26 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும், 24 பறக்கும் படை குழுக்களும், 136 ஆய்வு அலுவலர்களும், 136 தேர்வு முதன்மை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தேர்வை எழுத மொத்தம் 40 ஆயிரத்து 910 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் போதுமான போலீசாரை பாதுகாப்பு பணிக்கு காவல்துறையினர் நியமிக்க வேண்டும்.
தேர்வு மையங்களில் சுத்தமான குடிநீர் வசதி மற்றும் தூய்மை பணியினை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்புத்துறையினர், மாவட்ட கருவூலம் மற்றும் தேர்வு மையங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு வண்டிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
போக்குவரத்து துறையினர் தேர்வு நாளன்று தேர்வு மையங்கள் அமைந்து உள்ள வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். மின்சார வாரியம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நடமாடும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடியோ ஒளிப்பதிவுக்கும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மேலும் வினாத்தாள்களை பாதுகாப்பாக கருவூலத்தில் வைத்தல் மற்றும் தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை பாதுகாப்பாக மீண்டும் கருவூலத்தில் வைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பஞ்சவர்ணம் மற்றும் கல்வித் துறை, காவல்துறை, கருவூலம், நகராட்சி நிர்வாகம், மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, போக்குவரத்துதுறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.