பதிவுத்துறையில் புதிய மென்பொருள் அறிமுகம்; போலி ஆவணங்கள் பதிவு செய்வது தடுக்கப்படும், மண்டல அதிகாரி தகவல்
பதிவுத்துறையில் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டதன் மூலம் போலி ஆவணங்கள் பதிவு செய்வது தடுக்கப்படும் என்று மதுரை மண்டல பதிவுத்துறை துணைத் தலைவர் சிவக்குமார் தெரிவித்தார்.
மதுரை,
பத்திரப்பதிவுத்துறை கடந்த 2002-ம் ஆண்டு கணினிமயமாக்கப்பட்டது. அப்போது ஸ்டார் 1.0 என்ற மென்பொருள் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக பதிவுத்துறை சேவைகள் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இணையதள வழியில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வகையில் புதிதாக ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பல கட்ட செயல்முறை பயிற்சிகள் பதிவுத்துறை பணியாளர்களுக்கும், ஆவண எழுத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.
மேலும் முழுமையாக இணையதள வழியில் ஆவண பதிவுகளை பதிவுத்துறை மேற்கொள்ள உள்ளதால், பதிவுத்துறையில் பணிபுரியும் மாவட்டப் பதிவாளர்கள், சார்-பதிவாளர்கள், பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சி மதுரையில் நடந்து வருகிறது. இதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்திரப்பதிவுத் துறையில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிய மென்பொருள் குறித்த பயிற்சியை மண்டல கணினி பொறுப்பாளர் சேக் அப்துல்லா, கற்பகம் ஆகியோர் வழங்கினர். மதுரை மண்டல துணைப்பதிவுத்துறை துணைத் தலைவர் சிவக்குமார் புதிய மென்பொருள் பற்றி விளக்கி பேசினார். அவர் கூறியதாவது:- பத்திரப்பதிவை விரைவுபடுத்தவும், மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும் பதிவுத்துறையில் ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பதிவு செய்யும் நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம். பத்திரப்பதிவு தொடர்பான தகவல்கள் தற்போது மாவட்ட அளவில் தான் சேமிக்கப்படுகிறது. இந்த புதிய மென்பொருள் மூலம் சென்னையில் உள்ள மத்திய தகவல் சேமிப்பு மையத்திலும் தகவல்கள் உடனுக்குடன் சேமிக்கப்படும். இதன் மூலம் ஆவணங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
இத்திட்டம் பரீட்சார்த்த முறையில் மதுரை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் முன்னோடி திட்ட முறையில் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. எனவே அனைத்து அலுவலகங்களிலும் முழுமையாக இணைய வழி மூலம் ஸ்டார் 2.0 மென்பொருளை பயன்படுத்தி பத்திர பதிவினை மேற்கொள்ள பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. புதிய முறையில் பதிவு மேற்கொள்ளும் போது, வேறு நபர் போலி ஆவணங்களை பதிவு செய்ய முயன்றால் உரிய நபருக்கு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) அனுப்பப்பட்டு விடும். இதன் மூலம் போலி ஆவணங்களை பதிவு செய்வது தடுக்கப்பட்டுவிடும். முன்கூட்டியே ஆவணப்பதிவு நாள், நேரம் ஆகியவற்றை நிர்ணயித்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், ஆவணப்பதிவிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. மதிப்பு குறைவு நடவடிக்கை, கட்டிட கள ஆய்வு தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தியாக சம்பந்தப்பட்ட ஆவணதாரர்களுக்கு செல்லும் வசதி இதில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.