10 ரூபாய் தகராறில் வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து கொலை

10 ரூபாய் தகராறில் வாலிபரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-02-10 21:00 GMT
மும்பை,

மும்பை பவாய் சாய் பாரன்குட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமண் (வயது32). சம்பவத்தன்று இவர் நண்பர் தினேசுடன் அங்குள்ள ஓட்டலில் மதிய உணவு சாப்பிட சென்றார். அப்போது தினேஷ், லட்சுமணிடம் 10 ரூபாய் கேட்டார். லட்சுமண் பணம் கொடுக்காமல் தினேசை அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் அங்கிருந்த இரும்பு கம்பியால் லட்சுமணின் தலையில் பலமாக தாக்கினார்.

இதில் லட்சுமண் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இந்த காட்சிகளை பார்த்து அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் தினேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஓட்டலில் இருந்தவர்கள் லட்சுமணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து பவாய் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் லட்சுமண் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 10 ரூபாய் தகராறில் நண்பனை அடித்து கொலை செய்த தினேசை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்